×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் திமுக அபார வெற்றி பெற்று சாதனை-இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் திமுக அபார வெற்றி பெற்றதால், திமுகவின இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ராணிபேட்டை, ஆற்காடு, மேல் விஷாரம் ஆகிய 6 நகராட்சிகள், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், அம்மூர், கலவை, திமிரி ஆகிய 8 பேரூராட்சிகள் உள்ளது. இந்நிலையில், நகராட்சி, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 19ந் தேதி நடந்தது.

இதில், பதிவான வாக்குகள் அரக்கோணம்  கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் நேற்று எண்ணப்பட்டது.

அதன்படி, அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் 24 இடங்களில் திமுகவும், 8 இடங்களில் அதிமுகவும், 1 காங்கிரசும், 1 அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதேப்போல் சோளிங்கர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 15 திமுக, 4 காங்கிரஸ், 1 அதிமுக, 4 அமமுக, 2 பாமக, 1 சுயேட்சையும் ெவற்றி பெற்றுள்ளனர்.

இதேப்போல், வாலாஜா நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில், 15 திமுகவும், 6 அதிமுகவும், 1 பாஜகவும், 1 பாமகவும், 1 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேப்போல், ராணிப்பேட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், 23 திமுகவும், 4 அதிமுகவும், 1 காங்கிரஸ்சும், 1 விடுதலை சிறுத்தையும், 1 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். இதேப்போல், ஆற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், ஏற்கனவே 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ேமலும், 16 திமுக என 18 பேரும், 4 அதிமுகவும், 3 பாமகவும், 2 விடுதலை சிறுத்தையும், 3 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். அதேப்போல் மேல் விஷாரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 திமுகவும், 2 அதிமுகவும், 2 பாமகவும், 2 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சி பொறுத்தவரையில், தக்கோலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 7 திமுகவும், 6 அதிமுகவும், 1 பாமகவும், 1 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேப்போல் நெமிலி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 5 திமுகவும், 6 அதிமுகவும், 1 பாமகவும், 3 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். பனப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 திமுகவும், 3 காங்கிரஸ்சும், 1 அதிமுகவும், 1 விடுதலை சிறுத்தையும், 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். அதேப்போல், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 திமுகவும், 4 அதிமுகவும், 1 காங்கிரஸ்சும், 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதேப்போல், அம்மூர் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் 6 திமுகவும், 6 அதிமுகவும், 2 பாமகவும், 1 சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

கலவை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 7 திமுகவும், 8 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர். அதேப்போல், தமிரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் ஏற்கனவே 1 வார்டில் திமுக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 8 திமுக என மொத்தம் 9 பேரும், 2 அதிமுகவும், 2 விடுதலை சிறுத்தையும், 3 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதேப்போல், விளாப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், ஏற்கனவே 1 வார்டில் திமுக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், 6 திமுக என மொத்தம் 7 பேரும், 3 அதிமுகவும், 5 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Thimuka Abara ,Ranipetta district , Arakkonam: DMK has won in 6 municipalities and 8 municipalities in Ranipettai district.
× RELATED ராணிப்பேட்டை அருகே 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!!